குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.கல்லுண்டாய் பகுதியில் மலகழிவுகள் கொட்டவும் , குப்பைகளை எரியூட்டவும் மல்லாகம் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லுண்டாய் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதனை எதிர்த்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கு மீதான கடலலையின் போதே நீதிவான் அ. யூட்சன் தடையுத்தரவு பிறப்பித்தார்.
நீதிவான் தனது கட்டளையில் மேலும் குறிப்பிடுகையில் ,
கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டை சூழ மூன்று மாத கால பகுதிக்குள் வேலி அமைக்க வேண்டும். அப்பகுதிகளில் மல கழிவுகளை கொட்டுவதற்கும் , குப்பைகளை எரியூட்டவும் தடை விதிக்கப்படுகின்றது. மேலும் கொட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் உரிய முறையில் முகாமை செய்யப்பட வேண்டும். அத்துடன் கழிவு நீரையும் உரிய முறையில் முகாமை செய்ய வேண்டும். என உத்தரவிட்டார்.