Home உலகம்இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ரோய் சாதனை

இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ரோய் சாதனை

by admin

இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ரோய் சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்களைப் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ரோய் (Jason Roy ) பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் 151 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜேசன் ரோய்; பெற்றார என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் அலெக்ஸ் ஹோல்ஸ் 171 ஓட்டங்கங்களைப் பெற்று முன்னிலை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More