Home இலங்கைகிளிநொச்சியில் 94 பாடசாலைகளில் கால்கோள் விழா…

கிளிநொச்சியில் 94 பாடசாலைகளில் கால்கோள் விழா…

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்றைய(15) தினம் 94 பாடசாலைகளில் கால்கோள் விழா நடைபெற்றுள்ளது என கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்  நிகழ்வுகள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது. புதிதாக தரம் ஒன்றில்  சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் சம்பிரதாயபூர்வமாக சமய வழிபாடுகளை தொடர்ந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாடசாலையின்  முதல் நாளை மகிழ்ச்சியான நாளாக இருக்கும் வகையில் கால்கோள் விழாக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு கிளிநொச்சி வலயத்தின் வலய மட்ட கால்கோள் இவ்வருடம் கிளிநொச்சி இந்து  ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More