Home இந்தியா ஞாநி சங்கரன் என்ற ஞாநி காலம் ஆகினார்…

ஞாநி சங்கரன் என்ற ஞாநி காலம் ஆகினார்…

by admin

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை 64 ஆவது வயதில்  காலமானார்.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ஞாநியின் உடலுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஞாநியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

1954-ல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநியின் இயற்பெயர் சங்கரன். இவரது தந்தையும் வேம்புசாமியும் பத்திரிகை துறையில் பணியாற்றியவர். தந்தையின் வழியில் ஞாநியும் பத்திரிகை துறைக்கு வந்தார். 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி.

மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி தமது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். வார இதழ்களில் ஞாநி எழுதிய ஓ பக்கங்கள் அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தின. தந்தையைப் போல பத்திரிகை துறையில் இணைந்தவர் ஞாநி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் பணியாற்றினார். திமுகவின் முரசொலி நாளேட்டின் வார இணைப்பான புதையலின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தார். தீம்தரிகட என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். டிவி விவாதங்களில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி தொடர்ந்து பேசி வந்த ஞாநி, பரீக்‌ஷா என்ற நாடகக் குழு ஒன்றையும் நடத்திவந்தார்.

பூசி மெழுகாமல், பட்டென்று வெளிப்படையாகப் போட்டுடைக்கும் தைரியமான பத்திரிகையாளர், எழுத்தாளர்களில் ஒருவராக ஞாநி திகழ்ந்தார். பத்திரிகைகளைக் கடந்து நாடகம், அரசியல், பேஸ்புக்,  தொலைக்காட்சி விவாதம் என்று பரபரப்பாக இயங்கிவந்தார். தன் கருத்துக்களைக் களத்திலும் செயல்படுத்திப் பார்ப்பவர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஞாநி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More