196
பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெடிக்க ஆரம்பித்த இந்த எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டு வருவதாகவும் எரிமலை வெடிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அந்த தீவில் உள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை அரசாங்கம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love