Home சினிமாநதியாவின் இடத்தினை கைப்பற்றிய ரம்யா கிருஷ்ணன்

நதியாவின் இடத்தினை கைப்பற்றிய ரம்யா கிருஷ்ணன்

by admin

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து நதியா வெளியேறியுள்ளதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கிறார். ஷில்பா கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கும் சென்டற அவர் பின்னர் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார். கதாபாத்திரம் தான் கொடூர வில்லியாக நடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.  முதலில் தனது கதாபாத்திரம் குறித்து முழுவதும் கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்ட நதியா கொடூர வில்லியாக நடித்தால் தனது இமேஜ் கெட்டுவிடும் என்பதனால் வெளியேறியதாக கூறப்படுகிறது.

நதியா விலகியதை அடுத்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். வில்லியாக நடிப்பது ரம்யா கிருஸ்ணனுக்கு கைவந்த கலை என்பதனாலும் விஜய் சேதுபதிக்கு வில்லியாக அவர் நடிப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், சமந்தா, காயத்ரி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More