Home இலங்கைஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யாது அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யாது நிலைமை நீடித்தால் நிச்சயமாக மைத்திரிபால சிறிசேனவே சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன   தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவைணக்காக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மிகவும் பொருத்தமான வேட்பாளர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் நீடிக்க வேண்டுமென விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More