நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரானவன் என்றும் ஐதராபாத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதேபோல் மத்திய அரசு மற்றும் பா.ஜனதாவின் செயல்பாடுகளையும் விமர்சித்து பேசிவருகிறார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் இந்தியா ரூடே சார்பில் தென்னிந்திய கருத்தரங்கில், ‘கருத்து சுதந்திரம்’ என்ற தலைப்பில் கீழ் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
“அவர்கள் நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறுகிறார்கள். அது கிடையாது. நான் மோடிக்கு எதிரானவன், ஹெக்டேவுக்கு எதிரானவன், அமித் ஷாவிற்கு எதிரானவன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்துக்கள் கிடையாது. கொலையை ஆதரிக்கும் நபர்கள் இந்து அல்ல” என பிரகாஷ் ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை குறிப்பிட்டு பிரகாஷ் ராஜ் தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.