உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ரபல் நடால் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றில் இலகு வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் ரபால் நடால் அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றில் இலகு வெற்றியீட்டியுள்ளார். உலக டென்னிஸ் தரவரிசையின் அடிப்படையில் நடால் முதலாம் இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றில் பொஸ்னியாவின் டமிர் ஸும்கூர்( Damir Dzumhur) ஐ, நடால் எதிர்த்தாடியிருந்தார்.


இந்தப் போட்டியில் நடால், 6-1, 6-3 மற்றும் 6-1 என்ற நேர் செற்களில் டமிர் ஸும்கூரை இலகுவாக வீழ்த்தினார். நடால் இதுவரையில் 16 கிரான்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள நிலையில், அவர் ஒரேயொரு அவுஸ்திரேலிய ஓபன் சம்பியன் பட்டத்தையே வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap