Home இந்தியாபாடசாலை தலைமை ஆசிரியர், மாணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்..

பாடசாலை தலைமை ஆசிரியர், மாணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்..

by admin

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாடசாலையின் பெண் முதல்வரை, இன்று 12-ம் வகுப்பு மாணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அமிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம், யமுனாநகர் மாவட்டத்தில் விவேகானந்தா பாடசாலையில் படித்துவரும் 12-ம் வகுப்பு மாணவன் இன்று நன்பகல் சுமார் 12 மணியளவில் அப்பாடசாலையின் பெண் முதல்வர் ரிட்டு சாப்ரா என்பவரை நோக்கி திடீரென நான்குமுறை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரிட்டு சாப்ரா சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். அந்த மாணவனை கைது செய்த காவற்துறையினர், இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More