Home இலங்கைபாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவளித்து வரும் தரப்பினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து – மஹிந்த ராஜபக்ஸ

பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவளித்து வரும் தரப்பினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரே எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் கூட்டு எதிர்க்கட்சியை பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக கருதாத நிலைமை நீடித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக அரசாங்கத்திற்கு பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவளித்து வரும் தரப்பினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற அழிவுகளுக்கு ஜே.வி.பியும் பதில் சொல்ல வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More