Home இந்தியாஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக்க வேண்டாம்- மெகபூபா முப்தி

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக்க வேண்டாம்- மெகபூபா முப்தி

by admin

இந்தியாவும் பாகிஸ்தானும் தமது மாநிலமான காஷ்மீர் மாநிலத்தை போர்க் களமாக மாற்றிவிடக் கூடாது என அம் மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய காவலர்களின் பயிற்சி நிறைவு விழா பாரமுல்லாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் காஷ்மீர் மட்டும் அதற்கு எதிர் திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் காஷ்மீர் எல்லையில் ஏராளமாக ரத்தம் சிந்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, காஷ்மீரை மட்டும் போர்க்களமாக மாற்றிவிட வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பாகிஸ்தானையும் வேண்டி கொள்வதாக குறிப்பிட்ட முதலமைச்சர் இரு நாடுகளும் நட்பு ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

காஷ்மீரில் காவல்துறையில்   பணியாற்றுவது கடினமானது என்றும் உங்கள் முன் மிகப்பெரிய சவால்கள் நிறைய காத்திருக்கின்றன என்றும் கூறிய மெகபூபா, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபடும் போது மக்களிடம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் பொறுமையை இழக்காமல் செயல்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More