Home இலங்கைபொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்

பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்

by admin

பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூரில் இன்றிரவு காலமானதாக   தெரிவிக்கப்படுகின்றது .  இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.

இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More