267
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் பண வீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பண வீக்க வீதம் நவம்பர் மாதத்தில் 8.4 வீதமாக காணப்பட்டதாகவும், டிசம்பர் மாதம் அது 7.3 வீதமாக காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பண வீக்க விதம் 8 வீதத்திற்கும் அதிகமாகவே காணப்பட்டு வந்தது. எனினும் வருட இறுதியில் பண வீக்க வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love