Home இலங்கைபிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் உண்டா சபாநாயகர் அறிவிப்பார்:-

பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் உண்டா சபாநாயகர் அறிவிப்பார்:-

by admin

பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் உண்டா என்பதனை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றில் அறிவிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் இதற்கான இணக்கத்தை வெளியிட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் தாமும், ஜே.வி.பி கட்சியும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் பக்கங்கள் அல்லது இணைப்புக்களில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுகின்றதா என்பது குறித்து ஆராய்ந்து விளக்கம் அளிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதியளித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தி அதன் ஊடாக மத்திய வங்கி பிணை முறி தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் குறித்து தீர்மானிக்கப்படும் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More