குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) தம்மை கைது செய்யுமாறு தூண்டுவதாக ஸ்பெய்ன் உச்ச நீதிமன்ற நீதியரசர் பப்லோ லாரேனா ( Pablo Llarena ) தெரிவித்துள்ளார். கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி சார்ளஸ் கடந்த ஒக்ரோபர் மாதம் பெல்ஜியத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அண்மையில் பெல்ஜியத்திலிருந்து டென்மார்க்கிற்கு பயணம் செய்துள்ளார்.
சார்ளஸின் இந்த டென்மார்க் பயணமானது, தம்மை கைது செய்யுமாறு ஸ்பெய்ன் அரசாங்கத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் பப்லோ லாரேனா தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தமை, அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை, பிரிவினைவாதத்தை தூண்டியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் ஜனாதிபதி சார்ளஸிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது