ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை முதலமைச்சர் சமார சம்பத், பதுளை காவல் நிலையத்தில் முன்னலையாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முதலமைச்சர் சாமர சம்பத்தை நீதிமன்றில் முன்னலை செய்தினர் செய்திருந்தனர்.
நீதவான் நயந்த சமரதுங்க, முதலமைச்சரை தலா இரண்டு லட்சம் ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார். பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்தார் என சாமர சம்பத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இணைப்பு 2 – ஊவா மாகாண முதலமைச்சர் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார்.
Jan 23, 2018 @ 07:19
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊவா மாகாண முதலமைச்சர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பாடசாலையொன்றின் பெண் அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஒருவரின் ஊடாக சாமர சம்பத், காவல் நிலையத்தில் முன்னலையாகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து பதுளை நீதிமன்றில் ஊவா மாகாண முதலமைச்சர் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க காவற்துறை நிலையத்தில் சரண்…
Jan 23, 2018 @ 05:21
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறை நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.