Home சினிமா தந்தையாக மகன் துருவ்வின் நடிப்பை பார்க்க ஆவலாயுள்ளேன் – விக்ரம்

தந்தையாக மகன் துருவ்வின் நடிப்பை பார்க்க ஆவலாயுள்ளேன் – விக்ரம்

by admin


நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த வர்மா படமானது தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும்.  இந்தநிலையில் இந்தப் படத்தில் தனது தன் மகன் நடிக்க மறுத்திருந்தால் நான் நடித்திருப்பேன் எனவும் இப்போதும் தன்னால் இளமையான காதல் கதைகளில் நடிக்க முடியும் எனவும் விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


50 வயதிற்கு மேலானாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் ஒரு படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் தெரிவித்துள்ளமை பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது. விக்ரம் நடிப்பில் உருவான ஸ்கெட்ச் தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அத்துடன் விக்ரம் தற்பொழுது சாமி 2, துருவநட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்தநிலையிலேயே வர்மா படத்தில் தன் மகன் நடிக்க மறுத்திருந்தால் நான் நடித்திருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வர்மா படத்தில் வரும் அர்ஜூன் ரெட்டி கதைக்கு தன் மகன் துருவ் ரொம்ப கச்சிதமாகப் பொருந்துவார் எனவும் தான் ஒரு தந்தையாக துருவ்வை அந்தக் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு ஒரு ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More