குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டம் என்பன தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுமகன் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகளை பார்த்து தாம் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
சில காவல்துறை உத்தியோகத்தர்கள் தொழில்வான்மையையும் ஒழுக்கத்தையும் இழந்து செயற்பட்டு வருவதாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற பதற்ற நிலையை தடுப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.