சினிமா பிரதான செய்திகள்

நடிகை கிருஷ்ண குமாரி காலமானார்

  சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டவர்களுடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கிருஷ்ண குமாரி இன்று காலமானார் .தனது 84 வது வயதில் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் இவர் காலமானார்.

நடிகை கிருஷ்ணகுமாரி. நுடிககை சவுகார் ஜானகியின் தங்கையான இவர் 1951-ம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் நடித்த இவர் திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பிற மொழிகளில் சுமார் 200 படங்களில் ; இவர் நடித்துள்ளார்.

1960-70-களில் பிரபல நாயகியாக திகழ்ந்த கிருஷ்ண குமாரி, அந்நாள் கதாநாயகர்களான என்டி.ராமாராவ், அக்கினினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜூ, ராஜ்குமார், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருதினை பெற்ற கிருஷ்ண குமாரி கன்னட திரையுலகில் சுமார் 30 ஆண்டுகள் பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.