Home இலங்கைவடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்:

வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்:

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் அடிப்படையிலான திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில்இ அத்தகைய திட்டமேதும் அரசிடம் இருப்பின் அரசு அதனைக் கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டின் தேசிய திட்டமான பாரிய மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல கட்ட திட்டங்களால் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ்இ முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுகின்றது.  இதனால் மாகாவலி திட்டம் எனும்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தொடர்ந்தும் சந்தேகக் கண்ணோட்டமே காணப்படுகின்றது. வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே எமது மக்களுக்குக் கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி போன்ற பகுதிகளில் வாழ்ந்திருந்திருந்த நிலையில் யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களது சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு  பின்னர் அம் மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய செய்கைக்கு உதவாத சில காணிகளே வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இம் மக்கள் வாழ்வாதார ரீதியாகத் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையே தொடர்கின்றது.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள டீ வலது கால்வாய் திட்டமானது கிழக்கு மாகாணத்தின்  மட்டக்களப்பு பகுதியை உள்ளடக்கும் நிலையில்இ அங்குள்ள காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவேஇ ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துஇ தேசிய மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்றங்களில் தமிழ்  முஸ்லிம் மக்களையும் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More