188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எனக்கு நன்றாகவே சமைக்க தெரியும். சமைக்க விருப்பம் இருந்தும் தற்போது சமைக்க வேண்டிய தேவை தனக்கில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்த கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்த பின்னர் கண்காட்சி கூடத்தினை பார்வையிட்ட போது , ஒரு கூடத்தில் சமையல் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தற்போது எனது அம்மாவும் , மனைவியும் உயிருடன் இல்லை. அவர்கள் இருக்கும் போதே எனக்கு நன்றாக சமைக்க தெரியும். ஆனால் தற்போது சமைப்பதற்கான வாய்ப்புக்கள் எனக்கில்லை. அதனால் சமைப்பதில்லை. சமைக்க எனக்கு விருப்பம் என தெரிவித்தார்.
Spread the love