Home இந்தியாநடிகர் நானி கார் விபத்தில் சிக்கினார்…

நடிகர் நானி கார் விபத்தில் சிக்கினார்…

by admin

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி கார் விபத்தில் சிக்கி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.  தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய தமிழ் படங்களில்  நடித்துள்ளார். தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கும் நானி, ரெஜினா நடிக்கும் ‘அவ்’ படத்தைத் தயாரித்து வருகிறார். சமீப காலமாக தெலுங்கில் ஹிட் படங்கள் கொடுத்து வரும் அவர் நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நானியின் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நானியின் முகம் மற்றும் மூக்கில் அடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஓட்டுனரும் சிறு சிறு காயங்களோடு தப்பியுள்ளார். நானி தற்போது ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  ரசிகர்கள் நானியின் உடல்நலம், காயம் குறித்து விசாரித்து வந்தனர். தேவையற்ற வதந்திகளைத் தவிர்ப்பதற்காக  ட்விட்டரில் தான் நலமாக ஈருப்பதாக  பதிவிட்டுள்ளார்..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More