Home இலங்கைஇந்தியாவுக்கு ஏற்ற வகையில் இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது…

இந்தியாவுக்கு ஏற்ற வகையில் இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது…

by admin

நாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வகையில் இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் கடற்றொழில் நீரியில்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் சட்டத்திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை விடுத்து இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாது தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லை கடந்து இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கையை தடுப்பதற்காக, விதிக்கப்படும் அபராத் தொகையினை அதிகரித்து அரசாங்கம் கொண்டு வந்த மீன்பிடி சட்டத்தில் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதமர் நரோந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ; கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் எமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்தவொரு வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், இந்தியர்களின் சம்பிரதாயபூர்வமான மீன்பிடித் தொழிலை முன்னெடுப்பதற்கு எமது கடற் பிரதேசத்தில் இடமளிக்கப்படாது என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More