இலங்கை சினிமாவின் பொற்காலமான 70 தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க படைப்புக்களை வழங்கிய திரைப்பட இயக்குனராகவும் ஊடக கற்கை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளருமான தர்மசேன பத்திராஜ ருஹூணு பல்கலைக்கழகம், ஸ்ரீபாலி வளாகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய அவர், 1974 இல் “அஹஸ்கவ்வ“ திரைப்படத்தை இயக்கி திரைப்படத்துறையில் நுழைந்தார்.
“எயா தென் லொக்கு லமயெக்“ பொன்மணி, பம்பரு அவித், பார திகே, சோல்தாது உன்னஹே, வாசுலீ, மதுயம் தவச, சுவரூப சகா சத்காரங் ஆகிய உன்னத திரைபடங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அவர், “அந்துரென் எலியட்ட, வெரல, தல ரல பெல, புனராவர்த்தன, மாவதக் சொயனு பிணிச“ போன்ற விவரணப் படங்களையும் இயக்கியுள்ளதுடன், தொலைக்காட்சி நாடகங்களையும் இயக்கியுள்ளார்.
உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு ரீதியில் பெரும் புகழ்பெற்ற அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இலங்கை சினிமா துறைக்கு ஆற்றிய பணிக்காக வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் சுவர்ணசிங்க விருதையும் பெற்றுள்ளார். இவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது