தமிழக அரசுப் பேருந்துகளில் பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது கட்டணங்களை குறைத்து தமிழக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு கடந்த 19ம் திகதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த கட்டண உயர்வுக்கு எதிராக கல்லூரி மற்றும் பாடசாலை மாணவர்கள் வீதி மறியல், கல்லூரி புறக்கணிப்பு என போராட்டங்களில் றே;கொண்டனர். ஆத்துடன் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அத்துடன் எதிர்வரும்வரும் திங்கட்கிழமை பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்றையதினம் தேனியில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கட்டண உயர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார் இந்நிலையில், துணை முதல்வர் கருத்து வெளியிட்ட சில மணி நேரங்களில் பேருந்து கட்டணத்தை குறைத்து அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.