இந்தியா விளையாட்டு

ஓரம்போ ஓரம்போ – IPL வீரர்களின் விலை – எகிற வைக்கும் ப்ரீத்தி ஜிந்தா…


ஐபிஎல் ஏலத்தில் பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏல நிகழ்ச்சியில் பல் வலியுடன் ஏலத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் வரும் வீரர்களின் விலையை ப்ரீத்தி ஜிந்தா தாறுமாறாக ஏற்றுவிடுகிறார் எனவும் வீரர்களின் பெயர்களை அறிவித்த உடனேயே அவர் விலையை உயர்த்திவிடுகிறார் எனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ப்ரீத்தி ஜிந்தா கமராவுக்கு நேராக அமர்ந்துள்ளார். நேற்றைய ஏலத்தின்போது ஒருவர் ப்ரீத்திக்கும் கேமராவுக்கும் இடையே செல்ல ஓரமா போ என்று அவரிடம் கூறினார். இன்றும் கமராவுக்கு முன்பு பளிச்சென்று அமர்ந்துள்ளார். இன்றும் ஒருவர் ப்ரீத்தியை மறைக்க அவர் அந்த நபரை தள்ளி அமரச் செய்து கமராவுக்கு நேராக வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply