ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். சென்னை அணியிடம் தற்போது 11 கோடி மீதம் இருக்கிறது. மற்ற அனைத்து அணிகளிடமும் 3 கோடி வரை மட்டும் மீதம் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை அணி முரளி விஜய், சாம் பில்லிங்ஸ் ஆகியோரை அணியில் எடுத்து இருக்கிறது.
முரளி விஜய் நேற்றுஏலம் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இவர் டெஸ்ட் பார்மெட்டில் விளையாடக்கூடிய வீரர் என்பதால் யாரும் ஐபிஎல் போட்டிக்கு எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று முரளி விஜய் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2 கோடி கொடுத்து முரளி விஜய் ஏலம் எடுக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணிக்குத் திரும்பியுள்ளார் முரளி விஜய்.
அவ்வாறே சாம் பில்லிங்ஸ் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 1 கோடி கொடுத்து சாம் பில்லிங்ஸ் ஏலம் எடுக்கப்பட்டார். இவரும் நேற்று ஏலம் எடுக்கப்படவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் கீப்பர்.
சென்னை அணியிடம் மதியத்திற்கு பின் 11 கோடி வரை இருந்தது. மற்ற அணிகளிடம் 3 கோடி வரை மட்டுமே இருக்கிறது. சென்னை அணி அதை வைத்த தற்போது பல முக்கியமான வீரர்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
ஜெகதீசன் நாராயண்
ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது. சென்னை அணி நேற்று முழு நாளும் வயதான வீரர்களை எடுத்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து இளமையான வீரர்களை எடுத்துள்ளது. தற்போது சென்னை அணிக்கு கோயம்புத்தூர் காரரான எடுக்கப்பட்டு இருக்கிறார். ஜெகதீசன் நாராயண் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த வலது கை பேட்ஸ்மேன். அதேபோல் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர்.
டோணிக்கு காயம் ஏற்படும் சமயங்களில் இவர் இறக்கப்படலாம். இவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் விளையாடியதில்லை. அதே சமயத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிக்காக திண்டுக்கல் அணியில் விளையாடி இருக்கிறார். ரஞ்சி கோப்பை போட்டியிலும் விளையாடி இருக்கிறார். ஜெகதீசன் நாராயண் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து ஜெகதீசன் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது குறைந்தபட்ச தொகை 20 லட்சம் ஆகும். தமிழ்நாடு தற்போது சென்னையில் இருக்கும் இளமையான வீரர் இவர்தான். இவருக்கு 22 வயது ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை அணியில் தமிழக வீரர் இல்லை என்ற குறைபாட்டை இவர் சரிசெய்துள்ளார்.
மிட்சல் சாண்டர்
மிட்சல் சாண்டர் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். டேனியல் விட்டோரி அந்த அணியில் இருந்து ஓய்வுபெற்ற போது அவருக்கு பதில் அணியில் சேர்ந்தார். இவர் இடது கை ஸ்பின் பவுலர். சென்னை அணி தற்போது மிட்சல் சாண்டர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து மிட்சல் சாண்டர் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது குறைந்த பட்ச தொகையே 50 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அணியில் மூன்று ஸ்பின் பவுலிங் போடக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். இவர் சிறந்த ஆல்ரவுண்டர். ஏற்கனவே அணியில் ரெய்னா, ஜடேஜா, ஆகிய ஆல்ரவுண்டர் இருக்கிறார்கள். ஹர்பஜன் வேறு ஸ்பின் போடுவார். சென்னை அணி எந்த மாதிரியான அணியை உருவாக்க முயற்சி செய்கிறது என்று ரசிகர்களுக்கு தெரியவில்லை. வரிசையாக புதிய வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை எப்படிப்பட்ட அணியை உருவாக்கி இருக்கிறது என கடைசியில்தான் தெரியும்…
ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இப்போதுதான் ஏலம் எடுக்க தொடங்கி இருக்கிறது என்று கூட சொல்லலாம். வரிசையாக நிறைய வீரர்களை எடுத்து வருகிறது. நிறைய வீரர்கள் புதிய முகங்களாக இருக்கிறார்கள். புதிதாக 30 நிமிடத்தில் 5 வீரர்களை எடுத்துள்ளது. வெறும் 2 கோடிக்கு 5 வீரர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தீபக்
தீபக் சாஹர் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 80 லட்சம் கொடுத்து தீபக் சாஹர் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முன் ராஜஸ்தான் மற்றும் புனே அணிக்காக விளையாடி இருக்கிறார்.
ஆசிப்
ஆசிப் கேஎம் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.40 லட்சம் கொடுத்து ஆசிப் கேஎம் ஏலம் எடுக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இதற்கு முன் இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை.
லுங்கிசனி லுங்கிசனி கிடி
சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 50 லட்சம் கொடுத்து லுங்கிசனி கிடி ஏலம் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
கனிஷ் கனிஷ் சேத்
சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து கனிஷ் சேத் ஏலம் எடுக்கப்பட்டார். இவரும் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவருக்கு 20 வயதுதான் ஆகி இருக்கிறது. இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்.
துருவ் துருவ் சோரி
சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து துருவ் சோரி ஏலம் எடுக்கப்பட்டார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவருக்கு 22 வயது ஆகிறது. ஸ்பின் பவுலிங் பேட்டிங் என கலக்கும் புதிய ஆல்ரவுண்டர் இவர்.