Home உலகம்19 வயதுக்கு கீழ்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா முன்னனேற்றம்

19 வயதுக்கு கீழ்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா முன்னனேற்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

19 வயதுக்கு கீழ்ப்ட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய இளையோர் அணி முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, அவுஸ்திரேலியா வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுது;தாடத் தீர்மானித்தது. இதன்படி, 48 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், இக்ரம் அலி கில் 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஜே.மெர்லோ நான்கு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 37.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில், ஜே.எட்வர்ட்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் குவாஸி அஹமட் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More