Home இந்தியா“நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி” – ஒரு குரலை அடக்கினால் அது பல குரல்களாக மேல் எழும்பும்..

“நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி” – ஒரு குரலை அடக்கினால் அது பல குரல்களாக மேல் எழும்பும்..

by admin

மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும், நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகின்றார். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நான் கவுரி, நாம் எல்லோரும் கவுரி என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூருல் நடைபெற்றது. இதில நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்குப் பின், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ், சமுதாயத்தில் மக்களுக்காக போராடுவதற்கு கிடைக்கும் பலன் கவுரி லங்கேஷ் மறைவு எனக் கூறினார். மேலும் மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதி செய்ய மாட்டோம் எனவும், விதைகளாக விதைப்போம் என்றும் கூறிய பிரகாஸ் ராஜ், யாராவது ஒரு குரலின் சத்தத்தை அடக்கினால் அது பல குரலாக எழும்பும் என்றும் எச்சரித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More