தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவிடாமல் தடுப்பதானது மக்கள் கொடுத்த தேர்தல் ஆணையை மீறும் செயற்பாடு என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இனறு இடம்பெற்ற பௌர்ணமிதின சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டாலும் கடைசியில் நாடு என்ற ரீதியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைவர் எனத் தெரிவித்த அவர் கடந்த இரண்டு வருடங்களில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வருடங்களும் மிக முக்கியமானவை எனவும் இந்த காலப்பகுதியில்தான் இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது சண்டையல்ல எனவும் கருத்து வேறுபாடு மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்..
பிரச்சினைகள் வரும். ஜனாதிபதியும் பிரதமரும் சிறந்த முறையில் கையாளுவார்கள் எனவும் அதனைத்தான் நாட்டு மக்களும் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.