Home இந்தியாஒரே போட்டியில் 1045 ஓட்டங்களைப் பெற்ற மாணவன்

ஒரே போட்டியில் 1045 ஓட்டங்களைப் பெற்ற மாணவன்

by admin


மும்பையில் 14-வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் தனிஷ்க் கவாத் என்ற மாணவன் ஒரே போட்டியில் 1045 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் . மாணவர்களிடையே நடைபெற்ற நவி மும்பை கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின்; அரையிறுதிப் போட்டியின் போது யஷ்வந்த்ராவ் சவான் லெவன் அணி சார்பாக விளையாடிய தனிஷ்க் கவாத் 515 பந்துகளில் 149 பவுண்டரியும்இ 67 சிக்சரும் உள்ளடங்கலாக 1045 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இரு வருடங்களுக்கு முன் இரு பாடசாலைகளுக்கிடையிலான போட்டியின் போது பிரணவ் தனவதே என்ற மாணவன் 1009 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதை விட தன்ஷிக் அதிக ஓட்டங்களைப் எடுத்திருந்தாலும் இந்த போட்டித் தொடருக்கு மும்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் அங்கீகாரம் அளிக்காததால் தன்ஷிக்கின் சாதனையும் அங்கீகரிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More