குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை தடை செய்வதானது யுத்த செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டுமென ரஸ்யா தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எண்ணெய் உற்பத்திகளை வடகொரியாவிற்கு வழங்குவதனை தடுக்கக் கூடாது என ரஸ்யா தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை முற்று முழுதாக தடை செய்வதானது வடகொரியா மீது யுத்தப் பிரகடனம் செய்வதற்கு நிகரானது என தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணுவாயுத உற்பத்திகளை தடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சில தடைகளை வடகொரியா மீது விதித்துள்ளது. மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளை தடை செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்னெடுத்துள்ளது.