Home இலங்கைநாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்

நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்காக இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் பிரச்சனையை முற்றாக தீர்ப்பதற்காக தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் சிலர் கொல்லப்பட்டதன் ஊடாக மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நடனசிகாமணி தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடலில் செல்லும் கப்பலில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கப்பலில் ஆயிரம் பேர் உள்ளனர். அப்போது மாலுமி சொன்னார் கப்பலில் இருந்து ஐந்து பேர் கடலில் குதித்தால் நான் மிகுதி 995 பேரையும் உயிருடன் கரை சேர்ப்பேன். இல்லை எனில் 1000 பேரும் கடலில் மூழ்க வேண்டியது தான் என .

அதனை கேட்ட கப்பலில் இருந்த சிலர் ஐந்து பேரை கடலில் தள்ளி விட்டார்கள். பின்னர் மிகுதி 995 பேரும் உயிருடன் கரை சேர்ந்தனர்.

அதேபோன்றே நாட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது சிலர் கொல்லப்படுவதன் ஊடாகவே பிரச்சனைக்கு முடிவு வரும் என இருந்த போது இறுதி யுத்தத்தில் சிலர் கொல்லப்பட்டனர். அதனாலேதான் இன்று மற்றவர்கள் காப்பற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More