குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கியமை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடுமென இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீனா வெறுமனே துறைமுக அபிவிருத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியுள்ளது.
1 comment
தமிழர்களின் பாதுகாப்பை இந்தியா எப்படிப் பொருட்படுத்தாமல் விட்டதோ அதேமாதிரி இலங்கை அரசாங்கமும் இந்தியாவின் பாதுகாப்பை அலட்சியம் செய்து விட்டது