சினிமா பிரதான செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா?

உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது.  இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய். இந்நிலையில் நடிகர் விஜயின், விஜய் மக்கள் இயக்கத்திற்கு http://www.vijaymakkaliyyakam.in  என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கையோடு உறுப்பினர் சேர்க்கைக்காக தனி இணையத்தளங்களை ஆரமப்பித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜயும் அதே வேலையை செய்திருப்பது அவரும் அரசியலில் கால் பதிக்கப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.