குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்கிறார் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சனாதன் அவர்கள்.
கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் நடத்தப்பட்ட கரைச்சி பிரதேச சபை செயலாளருக்கெதிராக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது வரிப்பணம் சம்பந்தமாக தான் வருடப்பணத்தை முழுமையுமாக கட்டுவதற்கு கோரியிருந்ததாகவும் கூறியிருந்தார்கள் அது பொய்யானவை என்றும் தாம் அதுக்கென உத்தியோகத்தர்களை நியமித்து மாதம் மாதம் தரிப்பிடங்களுக்கு சென்று அந்த பணத்தை பெறுவதற்கு ஏற்பாடு செய்ததாகவும்,
தமது உத்தியோகத்தர்கள் தரிப்பிடங்களுக்கு செல்லும் போது அவர்கள் வரிப்பணத்தை செலுத்தாமலும் தங்களுக்கான அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் வழங்கினால்த்தான் வரிப்பணத்தை செலுத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஆகவே நாங்கள் எமது ஊழியர்களை அனுப்பி அந்த வரிப்பணங்களை அறவிடுகின்றோம். நாம் அனுப்பவில்லை வருடப்பணத்தை முழுக்க அறவிடுகின்றோம் என்பது உண்மைக்கு புறம்பானது. இவ்வாரறு வரிப்பணம் செலுத்தாத 27 பேருக்கு கடந்த வருடமும் 47 பேருக்கு இவ் வருடமும் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்
அதனைத்தொடர்ந்து பிரதேச சபை செயலாளர் தமது ஊழியர் முச்சக்கர வண்டி சங்க சாரதிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.அது பொய்யானது இவர்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் பிரதேச சபையின் உப அலுவலகம்தான் மேற்கொள்கின்றது.இவர்களுடைய தீர்வுகள் இவர்களுடைய வரிப்பணம் செலுத்துகின்ற அனைத்து செயற்திட்டங்களும் கரைச்சி பிரதேச சபை உப அலுவலகம்தான் மேற்கொள்கின்றது. இவர்களுக்கும் பிரதேச சபை செயலாளர் ஆகிய எனக்கும் தொடர்புகள் இருப்பதில்லை.
அதைவிட இந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் தலையீடுகள் இருப்பதாகவும் கரைச்சி பிரதேச சபை செயலாளர் குழப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தை பொறுத்த வரையில் இந்த மாவட்டத்தில் இந்த கரைச்சி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டி தரப்பிடங்களுக்கு அனுமதி வழங்குவதாக இருந்தாலும் ரத்து செய்வதாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் கரைச்சி பிரதேச சபைக்கும் அதிகாரம் இருக்கின்றது. ஆகவே சங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை சங்கம் ஊழியர்களுடைய நலத்திட்டங்களை பார்ப்பதற்குத்தான் சங்கம் இருக்கின்றது.
தரிப்பிட வரி அறவீடு, தரிப்பிட மேற்பார்வை மற்றும் அனுமதி வழங்குதல் அனுமதி ரத்து செய்தல் என்பன சங்கத்திற்கு இல்லை அந்த அதிகாரங்கள் கரைச்சி பிரதேச சபைக்கே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். .