164
காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர் இருவரும் பொதுமக்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் மத்திய ரிசர்வ் காவல்துறை படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு படையினரும், மாநில இணைந்து தப்பியோடி தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love