Home உலகம்இணைப்பு 2 – அமெரிக்காவில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து – இருவர் பலி 116 பேர் காயம்

இணைப்பு 2 – அமெரிக்காவில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து – இருவர் பலி 116 பேர் காயம்

by admin

அமெரிக்காவின் சவுத் கரோலினா பகுதியில் இன்று பயணிகள் புகையிரதமும் சரக்கு புகையிரதமும் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்  116   பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து 150 பேருடன் மியாமி நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் புகையிரதம் எதிர்திசையில் வந்த சரக்கு புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் புகையிரதத்தின் என்ஜின் மற்றும் இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பக்கவாட்டில் சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த விபத்திற்கு தவறான தண்டவாளத்தில் வந்த பயணிகள் புகையிரத காரணம் என அம்மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More