இலங்கை பிரதான செய்திகள்

புதன்கிழமையுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பூர்த்தி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் புதன்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 57,252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதேவேளை 43 அரசியல் கட்சிகளும், 222 சுயாதீனக்குழுக்களும் போட்டியிடுகின்றன. 341 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.  13,400 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாகவும், இம்முறை உத்தியோகப் பற்றற்ற அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.