Home இலங்கைவடக்கில் 25 வீதமான காணியே இராணுவம் வசம் உள்ளது – யாழில் ஜனாதிபதி

வடக்கில் 25 வீதமான காணியே இராணுவம் வசம் உள்ளது – யாழில் ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் தனியாருக்கு சொந்தமான 25 வீதமான காணிகளே இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், அதனை மிக விரைவில் காணி உரிமையார்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளதாகவும், என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும்தெரிவிக்கையில்

வடக்கில் தனியாருக்கு சொந்தமான 75 வீதமான காணிகளை கையளித்துள்ளோம். எஞ்சி உள்ள 25 வீதமான காணிகளையும் மிக விரைவில் கையளிக்க உள்ளோம். எனவே அது தொடர்பில் மிக கவனமாக நடவடிக்கை எடுத்து வருகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More