தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. நேற்று மாலை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும், புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கருத்து தெரிவித்த கஜேந்திரன்,
யுத்தத்தின் போது பல ஊயிர்கள் செல் தாக்குதல்களால் கொள்ளப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்தார். கடந்த தேர்தல் காலங்களில் மக்கள் சிந்தித்து வாக்களித்திருந்தால் கிளிநொச்சி ஜெமீனும் பாராளுமன்றம் சென்றிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். நாங்கள் ஜெனிவாவில் சென்று கொலை குற்றங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கையில் சிறிதரன் உட்பட பலர் தூதரக அதிகாரிகளுடன் ரகசிய பேச்சுக்களை முன்னெடுத்தனர். அவ்வாறு பேச்சில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.