Home இந்தியாமூன்று மாநிலங்களின் நடுவே பிரம்மாண்டமாக உருவாகும் தமிழ் கடவுள் முருகன்!

மூன்று மாநிலங்களின் நடுவே பிரம்மாண்டமாக உருவாகும் தமிழ் கடவுள் முருகன்!

by admin


மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு ஆந்திர அரசு பிரம்மாண்ட கோயிலை கட்டி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியிலேயே இந்த கோயிலை ஆந்திர அரசு உருவாக்கி வருகின்றது.

ஒரு காலத்தில் சென்னை மாகாணமாக இருந்த ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள குப்பம் தொகுதிக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குப்பம் தொகுதியின் மேற்குப் பகுதியில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டமும், கர்நாடகா மாநிலத்தில் கோலார் தங்கவயல் பகுதியின் எல்லையும் அமைந்துள்ளது.
மூன்று மாநிலங்களையும் இணைக்கும் அல்லது நடுப்பகுதியாகப் காணப்படும் இப் பகுதியில் தமிழ் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் இப் பகுதியில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு குப்பம் பகுதியில் பிரம்மாண்டமான கோயிலை ஆந்திர அரசு  அமைத்து வருகிறது. குப்பம் தொகுதிக்கு மேற்கேயுள்ள குடிப்பல்லி அடுத்த குடிவொங்கா என்ற இடத்திலேயே இவ் ஆலயம் அமைக்கப்படுகின்றது. ஏற்கெனவே சிறிய அளவில் காணப்பட்ட கோயில் தற்போது பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றது.

இந்தக் கோயிலைச் சுற்றி உட்பிரகாரம் அமைக்கும் பணிகளும், வெளிப் பிரகாரம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் கோவிலை பக்தர்கள் சுற்றிவர நடைபாதையும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. பக்தர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஆந்திர அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆலயத்திற்கு முக்கிய பிரமுகர்கள் ஹெலிகெப்டர் மூலம் வந்து செல்லுவதற்கு ஏதுவாக ஆலயம் அமைந்துள்ள மலையில்  ஹெலிகெப்டர் இறங்கு தளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More