மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு ஆந்திர அரசு பிரம்மாண்ட கோயிலை கட்டி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியிலேயே இந்த கோயிலை ஆந்திர அரசு உருவாக்கி வருகின்றது.
இந்நிலையில், தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு குப்பம் பகுதியில் பிரம்மாண்டமான கோயிலை ஆந்திர அரசு அமைத்து வருகிறது. குப்பம் தொகுதிக்கு மேற்கேயுள்ள குடிப்பல்லி அடுத்த குடிவொங்கா என்ற இடத்திலேயே இவ் ஆலயம் அமைக்கப்படுகின்றது. ஏற்கெனவே சிறிய அளவில் காணப்பட்ட கோயில் தற்போது பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றது.
இந்தக் கோயிலைச் சுற்றி உட்பிரகாரம் அமைக்கும் பணிகளும், வெளிப் பிரகாரம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் கோவிலை பக்தர்கள் சுற்றிவர நடைபாதையும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. பக்தர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஆந்திர அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது.