146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக அழைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக சுமார் பத்து கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட உள்ளனர். இந்தியாவிலிருந்து மூன்று கண்காணிப்பாளர்களும், கொரியா, மாலைதீவு மற்றும் இந்தோனேசியாவிலிருந்து தலா இரண்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்பட உள்ளனர். தேர்தல் நடைபெறும் எதிர்வரும் 10ம் திகதி இவர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
Spread the love