154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணியின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
குறித்த முறைப்பாட்டில் பெண் வேட்பாளர் தெரிவிக்கையில் ,
தனது வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வந்து , இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி கொள்ளுமாறு மிரட்டி சென்றனர் என தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love