141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 9ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு பெட்டிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை விநியோகம் செய்யும் நோக்கில் 19 பாடசாலைகளும், இரண்டு கல்வியற் கல்லூரிகளும் 7ம், 8ம் மற்றும் 9ம் திகதிகளிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் பாடசாலைகளும், கல்வியிற் கல்லூரிகளும் எதிர்வரும் 12ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Spread the love