மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்யத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக சுதந்திரக் கட்சி வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் இலங்கையில் ஒரு மாற்றம்…
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (11.02.18) நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.