Home உலகம்தமிழ் மக்கள் பேரவையின் அங்கமல்ல தமிழ் தேசிய பேரவை.

தமிழ் மக்கள் பேரவையின் அங்கமல்ல தமிழ் தேசிய பேரவை.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தமிழ் தேசிய பேரவை, தமிழ் மக்கள் பேரவையின் அங்கம் இல்லை. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என தமிழ் தேசியத்தில் பற்றுள்ளவர்கள் இணைந்து தமிழ் தேசிய பேரவை என ஒன்றிணைந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் அங்கம் அல்ல , தமிழ் தேசிய பேரவை ஆனாலும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை முன்னுறுத்தியே தேர்தலில் போட்டியிட்டோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More