Home உலகம்ரஸ்ய விமான விபத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஸ்ய விமான விபத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மொஸ்கோவிற்கு அருகாமையில் வைத்து இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்ளிட்ட 71 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். சராடோவ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


காலநிலை, மனித தவறுகள் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல்களாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வெளியிடப்படவில்லை. டொமொடிடொவோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More